வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடைவிழா
வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடைவிழா நடைபெற்றது.;
உடன்குடி:
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா மே.1-ந்தேதி வருசாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி 108 திருவிளக்கு பூஜை, 108 பால்குட ஊர்வலம், 301 சுமங்கலி பூஜை, கோலாட்டம், கரகாட்டம் கேரளா நடனங்கள், சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி, முத்தாரம்மன் சப்பரத்தில் பவனி, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, வில்லி சை, சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு அக்னி குண்டம் இறங்குதல், இரவு 8 மணிக்கு ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்தநிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள், நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.