கோவையில் இருந்து வாளையார் வரை மட்டுமே தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன

கோவையில் இருந்து வாளையார் வரை மட்டுமே தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன

Update: 2022-05-06 14:06 GMT

கோவை

கேரளாவில் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கோவையில் இருந்து வாளையார் வரை மட்டுமே தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

வேலை நிறுத்த போராட்டம்

கோவை திருவள்ளுவர் பஸ் நிலையம் மற்றும் உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு நகரங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

இதேபோல் கேராளவில் பல்வேறு இடங்களில் இருந்து கோவைக்கு கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இதில் நாள்தோறும் இரு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாதம் 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. 

இதன் காரணமாக கேரளாவில் இருந்து கோவைக்கு நேற்று காலை முதல் எவ்வித அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.

பயணிகள் அவதி

நேற்று முன்தினம் கோவை வந்த கேரளா பஸ்கள் மீண்டும் கேரளாவிற்கு இயக்கப்படாமல் உக்கடம் மற்றும் காந்திரம் பஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 

தமிழக அரசு பஸ்கள் கோவை உக்கடத்தில் இருந்து தமிழக-கேரள எல்லையான வாளையாறு வரை இயக்கப்பட்டன. 

இதனால் பயணிகள் வாளையாறு வரை சென்று அங்கிருந்து கேரளாவிற்கு நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

 சிலர் வாளையாறில் இருந்து கூடுதல் கட்டணம் செலுத்தி வாடகை வாகனங்களில் சென்றனர்.

கேரள போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் காரணமாக தமிழக மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த பயணிகள், சிறு வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் உக்கடத்தில் கேரளா பஸ் நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்