குளுந்தாளம்மன் தங்கபல்லக்கில் வீதி உலா
புள்ளம்பாடியில் குளுந்தாளம்மன் தங்க பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
கல்லக்குடி, மே.7-
புள்ளம்பாடியில் குளுந்தாளம்மன் தங்க பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குளுந்தாளம்மன்
புள்ளம்பாடியில் பிரசித்தி பெற்ற குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 20-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் மயில், சிம்மம், காமதேனு, ரிஷபம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 4-ந்தேதி நடைபெற்றது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் குளுந்தாளம்மன் தங்க பல்லக்கில் முக்கிய வீதிவழியாக வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதில், அறநிலையத்துறை செயல்அலுவலர் ஜெய்கிஷன், பேரூராட்சி செயல்அலுவலர் ஜவகர், தலைவர் ஆலிஸ்செல்வராணி, துணைத்தலைவர் இந்திராகாந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாமி குடிபுகுதல்
இன்று (சனிக்கிழமை) மதியம் சாமி குடிபுகுதல் நிகழ்வும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமகாரியஸ்தர்கள், ஆலய திருப்பணி குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.