ஆக்கிரமிப்பு அகற்றம் என்று கூறி ஏழை மக்களை வெளியேற்றக்கூடாது என பிஆர்நடராஜன் எம்பி கூறினார்

ஆக்கிரமிப்பு அகற்றம் என்று கூறி ஏழை மக்களை வெளியேற்றக்கூடாது என பிஆர்நடராஜன் எம்பி கூறினார்;

Update: 2022-05-06 13:50 GMT


கோவை

நீர் நிலைகளில் நீர்வரத்து இல்லாத இடங்களில் குடியிருப்பவர் கள் மற்றும் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பி.ஆர்.நட ராஜன் எம்.பி. தலைமையில் பொதுமக்கள்   கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  நிர்வாகிகள் பத்மநாபன், ராதிகா, பூபதி, கண்ணகி ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் பி.ஆர்.நடராஜன் எம்.பி. கூறுகையில், நீர் நிலைகளில் நீர்வரத்து இல்லாத இடங்களில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

இதேபோல் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் பல தலைமுறைகளாக வசிக்கின்றனர் அவர்களை காலி செய்ய கூறுவதுடன், வீடுகளை விட்டு வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். 

எனவே நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்று கூறி ஏழை மக்களை வெளியேற்றக்கூடாது என்றார்.

மேலும் செய்திகள்