சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சோளிங்கர்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ கொடியேற்றம்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம சாமி கோவில் 750 அடி மலை உச்சியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. முன்னதாக ஊர் கோவிலில் இருந்து பக்தோசிபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மலைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பல வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கொடி ஏற்றம் நடைபெற்றது.
தேரோட்டம்
நிகழ்ச்சியில் சோளிங்கர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு யோக லட்சுமி நரசிம்மர் மற்றும் அமிர்தவல்லி தாயாரை தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 10-ந் தேதி பக்தோசித பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனைத் தொடர்ந்து 12-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
இதில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.