கோவை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 40 ஆயிரத்து 90 பேர் எழுதினர்
கோவை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை 40 ஆயிரத்து 90 பேர் எழுதினர்
கோவை
கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை 40 ஆயிரத்து 90 பேர் எழுதினர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை, கோவை மாவட்டத்தில் 42 ஆயிரத்து 355 பேர் எழுத உள்ளதாக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக தூய காணிக்கை அன்னை, மணி மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி பள்ளிகள், புனித மரியன்னை பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 200 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது.
தேர்வு எழுதுவதற்காக மாணவ-மாணவிகள் தேர்வு மையங்க ளுக்கு காலை 8.30 மணிக்கே வரத்தொடங்கினர்.
தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் வரை பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவ- மாணவிகள் படித்து கொண்டிருந்தனர். முன்னதாக அவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம்ஆசிபெற்றனர்.
தேர்வு அறைக்குள் காலை 9.45 மணிக்கு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.
வினாத்தாள்
முன்னதாக அவர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து தேர்வு எழுத வந்திருந்தனர்.
முதல்நாளான நேற்று தமிழ் தேர்வு நடைபெற்றது. தேர்வறையில் 9.55 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.
மாணவர்கள் கேள்விகளை நன்றாக படித்து பார்த்து விட்டு பதில்களை எழுத தொடங்கினர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் மையம் அமைக்கப்பட்டு இருந்தது.
அங்கு அவர்கள் ஆசிரியைகள் உதவியுடன் தேர்வு எழுதினர். தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.
2,263 பேர் வரவில்லை