கோவையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஓட்டல்களில் இருந்து கெட்டுப்போன 57 கிலோ ஷவர்மாவை பறிமுதல் செய்தனர். 35 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்

கோவையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஓட்டல்களில் இருந்து கெட்டுப்போன 57 கிலோ ஷவர்மாவை பறிமுதல் செய்தனர். 35 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்

Update: 2022-05-06 13:34 GMT

கோவை

கோவையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஓட்டல்களில் இருந்து கெட்டுப்போன 57½ கிலோ ஷவர்மாவை பறிமுதல் செய்தனர். 35 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

அதிகாரிகள் ஆய்வு

கேரளாவில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்தார். அதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் ஏற்படுவதை தடுக்க அனைத்து ஓட்டல்களிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் அதிகாரிகள் 

கோவை போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், காந்திபுரம், பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர், ஒண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிரடியாக ஆய்வு  செய்தனர்.

அப்போது ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் ஷவர்மா தரமாக உள்ளதா?, பழைய இறைச்சியில் தயாரிக்கப்பட்டதா? அல்லது இறைச்சியை வெட்டிய உடன் தயாரிக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

57½ கிலோ ஷவர்மா பறிமுதல்

இதில் சில கடைகளில் கெட்டுப்போன, பழைய இறைச்சியில் ஷவர்மா தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மொத்தம் 73 கடைக ளில் இருந்து கெட்டுப்போன 57½ கிலோ ஷவர்மாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் சில கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகளை பயன்ப டுத்தி சமையல் செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். 

அதை யும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது

35 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவையில் நடத்திய ஆய்வில் 73 கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஷவர்மாவின் மதிப்பு ரூ.17 ஆயிரத்து 480 ஆகும்.  

மிகவும் கெட்டுப்போன, பழைய இறைச்சியில் தயாரித்த 3 ஷவர்மாவின் மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக விளக்கம் கேட்டு 35 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 3 கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

ஷவர்மா தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு உரிமம் இருப்பவர்களிடம் மட்டுமே ஷவர்மாவை வாங்கி பொதுமக்கள் சாப்பிட வேண்டும்.

கடும் நடவடிக்கை

தற்போது ரோட்டோர கடைகளிலும் ஷவர்மா தயாரித்து விற்பனை செய்கிறார்கள். 

எனவே ஷவர்மா அடுப்பு தூசிகள் படியாதவாறு பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். 

முக்கிய மாக ஷவர்மாவை நன்றாக வேகவைத்த பிறகு தான் வழங்க வேண்டும். 

அரைகுறையாக வேகவைத்து கொடுக்கக் கூடாது. தயாரித்த 2 மணி நேரத்துக்குள் விற்று விட வேண்டும். தயாரித்து நீண்ட நேரம் ஆகி விட்டால் விற்பனை செய்யக் கூடாது. 

அதையும் மீறி விற்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்