ஒலிபெருக்கி பிரச்சினை குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தது மட்டும் அல்ல- மந்திரி பாலசாகேப் தோரட் கருத்து

ஒலிபெருக்கி பிரச்சினை குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தது மட்டும் அல்ல என மந்திரி பாலசாகேப் தோரட் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-06 12:52 GMT
படம்
மும்பை, 
மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரி பாலசாகேப் தோரட் கூறியதாவது:- 
நாட்டில் பணவீக்க பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்பவே ஒலிபெருக்கி விவகாரம் எழுப்பப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. மறுபுறம் மாநிலத்தில் மகாவிகாஸ் அகாடி அரசு கொரோனாவை வெளிப்படை தன்மையுடன் எதிர்கொண்டு, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.
ஒலிப்பெருக்கி பிரச்சினை காரணமாக அதை பயன்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. ஒலிபெருக்கி பிரச்சினை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தது அல்ல. இது எல்லா பண்டிகையின் போதும், எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார். 


மேலும் செய்திகள்