தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-05-06 06:54 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களுடன் காலை 10 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்