பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி
பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
திருவெறும்பூர்:
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையடுத்த காட்டூர் சக்தி நகரை சேர்ந்தவர் டேவிட்(வயது 36). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர்(32). இந்நிலையில் உறையூர் நெசவாளர் காலனியை சேர்ந்த ரமேஷ்(35) மற்றும் துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்த அன்பு(36) ஆகியோர் ஜெனிபரிடம் கடந்த 2021-ம் ஆண்டு நிறுவனம் தொடங்குவதாக கூறி முதலீட்டிற்காக ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்.
மேலும் இரட்டிப்பு வட்டி தருவதாகக்கூறி மீண்டும் ஜெனிபரிடம் அவர்கள் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தராததால் இதுகுறித்து ஜெனிபர் திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.