மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-05-05 22:40 GMT
வாழப்பாடி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 58). விவசாய கூலித்தொழிலாளி. இவர் வாழப்பாடி பள்ளக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி பாட்டப்பன் என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது சைக்கிளில் வாழப்பாடி பேளூர் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சுப்பிரமணியின் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்