சேலம் மணியனூரில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சேலம் மணியனூரில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-05-05 22:14 GMT
சேலம்:
சேலம் மணியனூர் காத்தாயம்மாள் நகரில் கண்ணன் என்பவரின் வீட்டில் நேற்று உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, அங்கு 30 மூட்டைகளில் 1½ டன் அளவுக்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக மணியனூர் காத்தாயம்மாள் நகரை சேர்ந்த கண்ணன் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை பதுக்கி வைத்து கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்