சேலம் அம்மாபேட்டையில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்த கல்லூரி மாணவர் கைது

சேலம் அம்மாபேட்டையில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-05 22:04 GMT
சேலம்:
சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு பொருத்தப்பட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர் கண்காணிப்பு கேமராக்களை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்