பங்குசந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் தையல் தொழிலாளி தற்கொலை

பங்குசந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் சேலத்தில் தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

Update: 2022-05-05 22:02 GMT
சேலம்:
பங்குசந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் சேலத்தில் தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தையல் தொழிலாளி
சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 39), தையல் தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை சத்தியா தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் மதியம் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் விஜயகுமார் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு சத்தியா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ைசயத் சலீம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதில் தற்கொலைக்கு முன்பு விஜயகுமார் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
பங்குசந்தையில் நஷ்டம்
இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜயகுமார் எழுதி வைத்திருந்த கடிதத்தில், பங்குசந்தையில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் கிடையாது என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் விஜயகுமார் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்