டி.என்.பாளையம் அருகே 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது
டி.என்.பாளையம் அருகே 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர்- கொங்கர்பாளையம் ரோடு குன்னாங்கரடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் 3 பேர் துப்பாக்கிகளுடன் நின்று கொண்டிருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ‘அவர்கள் கொங்கர்பாளையம் முத்துக்கருப்பன் வீதியை சேர்ந்த கருப்புசாமி (வயது 26), குன்னாங்கரடு பகுதியை சேர்ந்த சங்கர் (42), இழுபாறை தோட்டத்தை சேர்ந்த குமார் (40) என்பதும், அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.