ஊஞ்சலூர் அருகே குரங்கன் ஓடையில் மழை வெள்ளம்
ஊஞ்சலூர் அருகே குரங்கன் ஓடையில் மழை வெள்ளம்
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே உள்ள கொம்பனைபுதூரில் காலிங்கராயன் சைபன் பாலம் உள்ளது. குரங்கன் ஓடை எனப்படும் அனுமன் நதி தண்ணீர் இங்கு வந்து சேறும். இந்தநிலையில் ஊஞ்சலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் குரங்கன் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சைபன் பாலத்துக்கு கீழே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. முடிவில் இந்த தண்ணீர் வெங்கம்பூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது.