தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை- மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை- மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு;

Update: 2022-05-05 21:38 GMT
தாளவாடி
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக  பகல் நேரத்தில் வெயில் வாட்டி வருவதும், மாலை நேரத்தில்  மழை பெய்வதுமாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் தாளவாடி, தொட்டகாஜனூர், அருள்வாடி, திகினாரை, கெட்டவாடி, சூசைபுரம், தலமலை, ஆசனூர் ஆகிய கிராமங்களில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. குன்னன்புரத்தில் இருந்து கிரிஜம்மா தோப்பு செல்லும் சாலையில் பழமையான வேப்பமரம் ஒன்று சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் பல கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.  இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது.

மேலும் செய்திகள்