டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

Update: 2022-05-05 21:36 GMT
ஆரல்வாய்மொழி:
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியாக கூலி வழங்க கேட்டு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் ஒருங்கிணப்பு குழு (சி.ஐ.டி.யூ.) சார்பில் செண்பகராமன்புதூரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் டாஸ்மாக் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்