அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-05-05 21:32 GMT
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே  அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
அரசு பஸ் மோதியது 
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவருடைய நண்பர்கள் கோட்டார் செட்டித்தெருவை சேர்ந்த தினேஷ்குமார் (26). வடலிவிளையை சேர்ந்த ருத்திரன் (26).
 இவர்கள் மூவரும் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள டெம்போ பழுது பார்க்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். 
வாலிபர் பலி
இந்தநிலையில் சம்பவத்தன்று  மணிகண்டன் உள்பட நண்பர்கள் 3 பேரும் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 
தோவாளை அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
மேலும் ஒருவர் சாவு
படுகாயமடைந்த தினேஷ்குமார், ருத்திரன் ஆகிய 2 பேரும் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
பின்னர், தினேஷ்குமார் மேல்சிகிச்சைக்காக நெல்லை ஐகிரவுண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்