பிளஸ்-2 தேர்வை உற்சாகத்துடன் எழுதிய மாணவ, மாணவிகள்

தென்காசி மாவட்டத்தில், பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினார்கள்.

Update: 2022-05-05 21:30 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 79 மையங்களில் 10,322 மாணவர்கள், 10,009 மாணவிகள் ஆக மொத்தம் 20,331 பேர் எழுதுகிறார்கள். பிளஸ்-1 பொதுத்தேர்வை 63 மையங்களில் 8,686 மாணவர்களும், 9,604 மாணவிகளும் ஆக மொத்தம் 18,290 பேர் எழுதுகிறார்கள். இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு 63 மையங்களில் நடைபெற்றது. இதில் 8,264 மாணவர்களும், 9,136 மாணவிகளும் ஆக மொத்தம் 17,400 பேர் தேர்வு எழுத இருந்தனர்.

கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினார்கள். இவர்களை கண்காணிக்க 96 நிற்கும் படை உறுப்பினர்கள் மற்றும் 10 சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்