நெல்லையில் கடைகள் அடைப்பு

வணிகர் தினத்தையொட்டி நெல்லையில் கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2022-05-05 20:48 GMT
நெல்லை:
தமிழகத்தில் வணிகர்கள் தினம் மே மாதம் 5-ந்தேதியான நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் மாநாடுகள், கூட்டங்கள் நடத்தினார்கள். இதையொட்டி நெல்லையில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து விட்டு மாநாட்டுக்கு சென்றிருந்தனர்.

களக்காட்டிலும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. டீக்கடைகள், ஓட்டல்களும் மூடப்பட்டன. இதனால் பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. 

மேலும் செய்திகள்