போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

காதலிக்குமாறு மாணவிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-05-05 20:02 GMT
வள்ளியூர்:
ராதாபுரத்தைச் சேர்ந்தவர் பரத் (வயது 21). இவர் கல்லூரி மாணவி ஒருவரின் கையை பிடித்து இழுத்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பரத்தின் நண்பர் மகராஜன் (29) என்பவரும், பரத்தை காதலிக்குமாறு அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பரத், மகராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.



மேலும் செய்திகள்