சொகுசு விடுதியில் சூதாடிய 5 பேர் கைது
சொகுசு விடுதியில் சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்
ஒரத்தநாடு
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள ஒரு ெசாகுசு விடுதியில்(லாட்ஜ்) பணம் வைத்து சூதாடப்படுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட சொகுசு விடுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது36), விஜயகுமார்(46), ராஜா(46), சத்யா (41), திருப்பதி என்கிற வெங்கடாஜலம் (53) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.