வேலை கிடைக்காததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

வேலை கிடைக்காததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-05-05 19:25 GMT
அஞ்சுகிராமம், 
அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் அழகனாபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராஜன் (வயது27), டிப்ளமோ பட்டதாரி. இன்னும் திருமணமாகவில்லை. இவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் அடிக்கடி வீட்டில் தாயாரிடம் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்று வேதனைப்பட்டு வந்தார். தாயார் அவரை தேற்றி வந்தார். 
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற ஸ்ரீராஜன் நேற்று மதியம் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸிமேனகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்