மார்த்தாண்டம் அருகே சாலையோரம் இருந்த வழிபாட்டு தலம் அகற்றம்

மார்த்தாண்டம் அருகே சாலையோரம் இருந்த வழிபாட்டு தலம் அகற்றம்;

Update: 2022-05-05 19:19 GMT
குழித்துறை, 
மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் வாத்தியார்விளையில் சாலையோரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 2 பெரிய மரம் உள்ளது. அதில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தூக்கு விளக்கு கட்டி வழிபாடு நடத்தி வந்தனர். சம்பவத்தன்று இரவில் 1½ அடி உயரமுள்ள ஒரு வெண்கல சூலாயுதமும் அங்கு வைக்கப்பட்டது. மறுநாள் காலையில் இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கும், அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக மேல் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் மேல் அதிகாரிகளின் அறிவுரைப்படி ஒரு பூசாரியை வரவழைத்து பரிகார பூஜை செய்து சூலாயுதத்தையும், விளக்கையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி வழிபாட்டு தலத்தை அகற்றினர். 

மேலும் செய்திகள்