வேன் மீது லாரி மோதல்; டிரைவர் பலி

வேன் மீது லாரி மோதி டிரைவர் பலியானார்.

Update: 2022-05-05 19:17 GMT
குன்னம்
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மோகன்தாஸ்(வயது 65). இவர், தனது குடும்பத்தினருடன் ஒரு வேனில் தஞ்சாவூரில் உள்ள குலதெய்வ கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நேற்று மாலை சென்றுகொண்டிருந்தார். வேனை சென்னையை சேர்ந்த பாலசுப்ரமணியம்(35) ஓட்டி வந்தார். பெரம்பலூர்- அரியலூர் தேசிய சாலையில், தங்க நகரம் அருகே சென்றபோது அரியலூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக வேன் மீது மோதி விபத்துக்குள்ளாகி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் வேனை ஓட்டி வந்த பாலசுப்பிரமணியன் வேனின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தார்.
மேலும், வேனில் பயணித்த மோகன்தாஸ், இவரது மனைவி லோகநாயகி(60), உறவினர்களான வடபழனியைச் சேர்ந்த சாரதாதேவி, சாலி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் மகள் காவிரி(3), அகமது ஷெரீப் மகன் அர்ஷத்(12), ராமகண்ணன், ஜெகதீஸ்(36), வேதவள்ளி(60) உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த நபர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்