முதியவர் மயங்கி விழுந்து சாவு

முதியவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்

Update: 2022-05-05 18:53 GMT
சிவகங்கை, 
சிவகங்கை நகரில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. தினசரி 100 டிகிரிக்குமேல் வெப்பத்தின் அளவு உள்ளது. இதனால் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்ற னர். சிவகங்கை நகரில் 102 டிகிரி வெயில் தாக்கம் இருந்தது. இந்தநிலையில் சிவகங்கையை அடுத்த ஊத்திக்குளம் கிராமத்தை சேர்ந்த பாண்டி (வயது70) என்பவர் நேற்று மதியம் தனது வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் காய்கறி வாங்க சிவகங்கை நேரு பஜார் பகுதிக்கு வந்தார். அப்போது அவர் நேரு பஜாரில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு சரிந்து கீழே விழுந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில் பாண்டி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்