டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படுமா?
கச்சிராயப்பாளையம் பதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கச்சிராயப்பாளையம்
இந்த கடைக்கு வரும் மதுபிரியர்கள், கடை முன்பு அமர்ந்து மது குடித்துவிட்டு, பஸ் நிலையத்திற்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவிகளையும், வாரச்சந்தைக்கு வரும் பெண்களையும் கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.