நகராட்சி கூட்டத்தில் 95 தீர்மானங்கள் நிறைவேற்றம்
வாணியம்பாடி நகராட்சி கூட்டத்தில் 95 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகராட்சி சாதாரண கூட்டம் மற்றும் உள்ளூர் திட்டக் குழும கூட்டம் நகரமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜிகணேசன் தலைமை வகித்தார். ஆணையாளர் ஸ்டாலின் பாபு, நகரமைப்பு அலுவலர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சங்கர் வரவேற்றார்.
கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள பல்வேறு திட்ட பணிகள் குறித்து 93 தீர்மானங்கள், உள்ளூர் திட்ட குழுமம் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் என மொத்தம் 95 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மறைந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினர் 5 பேருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.