மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ் ஏட்டு சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ் ஏட்டு உயிரிழந்தார்.

Update: 2022-05-05 18:43 GMT
பெரம்பலூர்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 52). போலீஸ் ஏட்டான இவர் பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை சாமியப்பா நகரில் வசித்து வந்தார். ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் மாவட்டம், தேவையூர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் ரவிச்சந்திரன் படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்