ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.;
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரால் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில், ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நேற்று தீயணைப்பு ஒத்திகை நடத்திக் காண்பித்தனர். இதில் வீட்டு சமையலறை, பல்வேறு அலுவலகங்கள், ஓட்டல்கள், ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்படும் சூழ்நிலைகள் குறித்தும், ஒவ்வொரு வகை தீ விபத்து ஏற்படும்போது தீ பரவாமல் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விரிவாக செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.