12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

ஆம்பூர் அருகே 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Update: 2022-05-05 18:28 GMT
ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவரது 12 வயது மகளுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். 

அங்கு பரிசோதித்த போது சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. 

இது தொடர்பாக ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை ஏமாற்றிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்