விஷம் தின்ற பெண் சாவு

விஷம் தின்ற பெண் உயிரிழந்தார்.

Update: 2022-05-05 18:24 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர்-துறையூர் சாலையில் பாளையம் பிரதான சாலை அண்ணா நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கவிதா(வயது 37). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கருக்கும், கவிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால், கணவரிடம் கோபித்து கொண்டு கவிதா கொப்பம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று கடந்த 3 மாதங்களாக வசித்து வந்தார். இதையடுத்து கவிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் கணவர் வீடான பாளையத்துக்கு வந்தார். மேலும் யாரிடம் பேசாமல் மன உளைச்சலில் இருந்த கவிதா நேற்று மதியம் வீட்டில் இருந்த சாணி பவுடரை (விஷம்) தின்று விட்டதில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்