வழிதவறி ஊருக்குள் வந்த புள்ளிமான்

ஏலகிரிமலையில் வழிதவறி ஊருக்குள் வந்த புள்ளிமான், காட்டுக்குள் விடப்பட்டது.;

Update: 2022-05-05 18:17 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் மான், கரடி, மயில்கள், மலைப்பாம்பு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று அதிகாலை ஆண் புள்ளி மான் ஒன்று காட்டுப்பகுதிக்குள் இருந்து வழி தவறி அத்தனாவூர் ஊருக்குள் வந்துள்ளது.

 இந்த மானை நாய்கள் விரட்டி கடிக்க முயன்றுள்ளன. இதனால் அருகில் இருந்த தனியார் தங்கும் விடுதிக்குள் மான் புகுந்தது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் வனவர் பரந்தாமன் தலைமையிலான வனக்காவலர்கள், பொதுமக்கள் உதவியுடன் புள்ளி மானை பிடித்து ஆட்டோவில் எடுத்துச் சென்று அத்தனாவூர் அடுத்த நாகலூத்து காப்புக் காட்டில் விட்டனர். 

மேலும் செய்திகள்