வீட்டிற்குள் நுழைய முயன்ற சாரைப்பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளி அருகே வீட்டிற்குள் நுழைய முயன்ற சாரைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2022-05-05 18:13 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளியை அடுத்த தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது வீட்டில் நேற்று 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு  நுழைய முயன்றது. இதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி சாரைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

மேலும் செய்திகள்