கொல்லிமலையில் அதிகபட்சமாக 48 மி.மீட்டர் மழைபதிவு
கொல்லிமலையில் அதிகபட்சமாக 48 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நேற்று முன்தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. இருப்பினும் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக கொல்லிமலையில் 48 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு :-
கொல்லிமலை-48, எருமப்பட்டி-20, மோகனூர்-17, ராசிபுரம்-11, நாமக்கல்-10, சேந்தமங்கலம்-9, பரமத்திவேலூர்-6, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-6, புதுச்சத்திரம்-5, மங்களபுரம்-1. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 133 மி.மீட்டர் ஆகும். இந்த கோடை மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.