பரமத்திவேலூர் சந்தையில் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி

பரமத்திவேலூர் சந்தையில் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி

Update: 2022-05-05 18:11 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் நடந்த சந்தையில் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண்மை சந்தை
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 19 ஆயிரத்து 510 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். 
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.90.01-க்கும், குறைந்தபட்சமாக ரூ.78.15-க்கும்‌, சராசரியாக ரூ.88.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16 லட்சத்து 97 ஆயிரத்து 76-க்கு வர்த்தகம் நடைபெற்றது. 
விவசாயிகள் கவலை
இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்திற்கு ‌18 ஆயிரத்து 638 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.89.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.35-க்கும், சராசரியாக ரூ.88.69-க்கும் ஏலம் போனது. 
மொத்தம் ரூ.16 லட்சத்து 16 ஆயிரத்து 682-க்கு வர்த்தகம் நடைபெற்றது. தேங்காய் பருப்பின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்