எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 26 ஆயிரத்து 933 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை விருதுநகர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 933 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

Update: 2022-05-05 18:05 GMT
விருதுநகர், 
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை விருதுநகர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 933 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். 1,750 அலுவலர்கள் தேர்வு பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 
கடந்த 2 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பொதுத்தேர்வு தொடங்குகிறது. 
விருதுநகர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 635 மாணவர்களும், 13 ஆயிரத்து 298 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 933 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை எழுதுகின்றனர். 663 தனித்தேர்வர்களும், 186 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 115 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 
1,750 அலுவலர்கள்
இதில் 4 மையங்கள் தனித்தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,750 அலுவலர்கள் தேர்வு பணிகளில் பணியமர்த்தப்படுகின்றனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்