திருவாரூர் மாவட்டத்தில், இன்று தொடங்குகிறது: 16 ஆயிரத்து 25 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்
திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 16 ஆயிரத்து 25 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
திருவாரூர்:-
திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 16 ஆயிரத்து 25 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள 68 தேர்வு மையங்களில் 8 ஆயிரத்து 67 மாணவர்கள், 7 ஆயிரத்து 958 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 25 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், தடையின்றி மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
அனுமதி இல்லை
மேலும் தேர்வு மையத்தில் செல்போன், கால்குலேட்டர் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.
தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.