தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திண்டிவனம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த மதுராந்தகம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி மகன் சரத்குமார்(வயது 21). இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சரத்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரத்குமார் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.