வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 12 பேர் காயம்
வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர்.
மயிலம்,
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் ஒன்று விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற லாரி திடீரென நின்றதாக தெரிகிறது. இதனால் எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ் அந்த லாரி மீது மோதியது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்சின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதமடைந்தன. இதில் 2 பஸ்களிலும் பயணம் செய்த சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த கக்கன் (வயது 8), சதீஷ், ஆரிஷ் பேகம், முஸ்தபா உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மற்றும் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.