இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும்

இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-05-05 17:44 GMT
கொள்ளிடம்:
 கொள்ளிடம் அருகே தாண்டவம்குளம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தேசிய ஆசிரியர் கூட்டணி சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்குமரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கவிதா வரவேற்றார். நிர்வாகிகள் ராஜேந்திரன், லதா, சுஜாதா, மதிவாணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கடந்த 6 மாத காலமாக தாண்டவம்குளம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி பணிபுரியும் 6 இடைநிலை ஆசிரியர்களுக்கும் மாத சம்பளம் வழங்கவில்லை. 2017-ம் ஆண்டுமுதல் தேர்வு நிலை ஊதியம், முதல் ஊக்க ஊதியம், சிறப்பு நிலை ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு வழங்கவில்லை. எனவே அனைத்து வகை ஊதியம் உள்ளிட்ட 6 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இப்பள்ளியில் பயின்று வரும் 6 ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்