பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறையில் பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-05 18:30 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே தருமபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அகோரம் மகன் செந்தில் (வயது 33). இவர் மயிலாடுதுறை நகரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பிளஸ்-1 மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்