பெரிய மணலி, மணலி ஜேடர்பாளையம் அரசு பள்ளிகளில் 4 புதிய வகுப்பறை, ஆய்வகங்கள் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

பெரிய மணலி, மணலி ஜேடர்பாளையம் அரசு பள்ளிகளில் 4 புதிய வகுப்பறை, ஆய்வகங்கள் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்;

Update: 2022-05-05 17:25 GMT
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியம் பெரியமணலி மற்றும் மணலி ஜேடர்பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடங்களில் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பில் புதியதாக 4 வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நடந்தது. இதனை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
இதையடுத்து அரசு மேல்நிலை பள்ளிக்கூடங்களில் நடந்த திறப்பு விழாவில் எலச்சிபாளையம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய அட்மா சேர்மனுமான தங்கவேல் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கபிரகாசம், அமிர்தலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் சேகர், வேலுமணி, மோகன், பெரியசாமி, மணிகண்டன், ராஜ்குமார், பாபு, வசந்தி குழந்தைவேல், நடராஜன், மணிகண்டன், அன்புசெல்வன், ஜீவா, மாரிசெட்டி, பாஸ்கர், சம்பத்குமார், ராமலிங்கம், பிரகாஷ், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்