கிணற்றில் வாலிபர் பிணம்

கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் வாலிபர் பிணம்;

Update: 2022-05-05 17:25 GMT
கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் மேட்டுப் பகுதியில் துணிகள் இருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் கீழ்பென்னாத்தூர் தீயணைப்புத் துறையினரை வரவழைத்தனர்.

 தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடினர். அப்போது அரை நிர்வாணத்துடன் இருந்த வாலிபர் பிணத்தை மீட்டனர். 

இதையடுத்து இறந்தவர் யார் என போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் போளூரை அடுத்த படியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் மகன் வேல்முருகன் (வயது 25) என தெரியவந்தது. 

இவர் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் எதற்காக சோமாசிபாடி கிராமத்திற்கு வந்தார் என்பது குறித்தும், கிணற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உபயதுல்லாகான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்