போலீஸ் சூப்பிரண்டிடம் இந்து முன்னணி மனு
போலீஸ் சூப்பிரண்டிடம், இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.
தர்மபுரி:-
தர்மபுரி மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனை நேரில் சந்தித்து கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்து மதத்தினர் வழிபடும் தெய்வங்களான தில்லை நடராஜர் மற்றும் காளி நடனத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது இந்து மதத்தை சேர்ந்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. புகார் அளிக்க வந்தவர்களில் ஒருவர் சிவபெருமான் போன்று வேடமணிந்து கையில் சூலத்துடன் வந்ததால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.