கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் 16 துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துளார்

Update: 2022-05-05 17:22 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் 16 துணை தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துளார். அதன் விவரம் வருமாறு:-
சின்னசேலம் மண்டல துணை தாசில்தார் சசிகலா கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், உளுந்தூர்பேட்டை மண்டல துணை தாசில்தார் கோவிந்தராசு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், சங்கராபுரம் மண்டல துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை அதே அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி மண்டல துணை தாசில்தார் வைரக்கண்ணன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தலைமை உதவியாளராகவும், திருக்கோவிலூர் மண்டல துணை தாசில்தார் விஜயன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தலைமை உதவியாளராகவும், கல்வராயன்மலை தலைமையிடத்து துணை தாசில்தார் மனோஜ் முனியன் சின்னசேலம் மண்டல துணை தாசில்தாராகவும், களையநல்லூர் தரணி சுகர் தனித்துணை தாசில்தார்  கிருஷ்ணமூர்த்தி திருக்கோவிலூர் மண்டல துணை தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் விஜயா உளுந்தூர்பேட்டை மண்டல துணை தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் ராமமூர்த்தி சங்கராபுரம் மண்டல துணை தாசில்தாராகவும், உளுந்தூர்பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் அந்தோணிராஜ் கள்ளக்குறிச்சி மண்டல துணை தாசில்தாராகவும், சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தலைமை உதவியாளராகவும், (ஈட்டிய விடுப்பு முடித்து) துணை தாசில்தார் தேவதாஸ் கல்வராயன்மலை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தின் தலைமை உதவியாளர் சோமசுந்தரம் திருக்கோவிலூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் கனகபூரணி உளுந்தூர்பேட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (வரவேற்பு) துணை தாசில்தார் கமலக்கண்ணன் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும், சங்கராபுரம் தலைமையிடத்து துணை தாசில்தார் பாண்டியன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் (வரவேற்பு) துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இவ்வாறு மேற்கண்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்