வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பூ மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி மகன் கோபாலகிருஷ்ணன் (வயது33). இவர் வேப்பங்குளம் விலக்கு சாலையில் நடந்து சென்றபோது அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்து உள்ளார். போலீசார் விரட்டி பிடித்து விசாரித்ததில் வேப்பங்குளம் துரைப்பாண்டி கொலை வழக்கு தொடர்பாக பழிவாங்குவதற்காக வாளுடன் சுற்றி திரிவது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வாளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.