தேர்வின் போது மயங்கி விழுந்த பிளஸ்-2 மாணவி
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது பிளஸ்-2 மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்பாடி
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது பிளஸ்-2 மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த மாணவி
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு நடந்தது. அந்த பள்ளியில் படிக்கும் கீர்த்திகா என்ற மாணவி தேர்வு எழுத வந்திருந்தார். அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. அதனால் சோர்வாக காணப்பட்டார். இருந்தாலும் பொதுத்தேர்வு என்பதால் தேர்வு எழுத பள்ளிக்கு வந்திருந்தார். தேர்வு தொடங்கியதும் ஆர்வமாக தேர்வை எழுத தொடங்கினார்.
தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும் போது திடீரென அவர் தேர்வறையில் மயங்கி விழுந்தார்.
பரபரப்பு
அதனால் தேர்வறை கண்காணிப்பாளரும், மற்ற மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி தலைமைஆசிரியர் தெரிவித்தார். அதன்படி காரில் அவரை ஆசிரியர்கள் அழைத்துச்சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவரை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தனர். மீண்டும் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
சிறிது நேரம் தேர்வு எழுதிய மாணவி மீண்டும் மயங்கி விழுந்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோரை ஆசிரியர்கள் வரவழைத்து மாணவியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
=====