மின்னல் தாக்கி மாடு கன்று பலி
கலசபாக்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; மின்னல் தாக்கி மாடு கன்று பலி
கலசபாக்கம்
கலசபாக்கம் பகுதியில் இன்று மாலை திடீரென சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதில் கலசபாக்கத்தை அடுத்த மேல்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாச்சி என்பவரின் கன்று குட்டி மின்னல் தாக்கி பலியானது.
அந்த நேரத்தில் கன்று குட்டிக்கு அருகில் நின்றிருந்த அண்ணாச்சிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் சுப்பிரமணி என்பவருக்கு மின்னல் தாக்கி காயம் ஏற்பட்டது. தென்பள்ளிபட்டு ஊராட்சி மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மூர்த்தியின் பசுமாடு மின்னல் தாக்கி பலியானது.
பூண்டி கிராமத்தில் மின்னல் தாக்கி தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.